r/tamil • u/dan_da_nakkaa • 1h ago
கலந்துரையாடல் (Discussion) எதுவாக இருக்கும்
அலையில் சென்றாலும், தீயில் சென்றாலும், முடிவு ஒன்றுதான்...
அதுபோலத்தான் அவளைக் காதலித்தாலும்—
கிடைப்பது காதல் வழியா, காதல் வலியா?
r/tamil • u/LearnTamil • Aug 27 '26
r/tamil • u/dan_da_nakkaa • 1h ago
அலையில் சென்றாலும், தீயில் சென்றாலும், முடிவு ஒன்றுதான்...
அதுபோலத்தான் அவளைக் காதலித்தாலும்—
கிடைப்பது காதல் வழியா, காதல் வலியா?
r/tamil • u/Unique_Phrase_7806 • 15h ago
r/tamil • u/AlternativeShift9505 • 19h ago
நீரோங்கி வளர்கமல
நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 1
நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 2
அம்பளிங்கு பகலோன்பால்
அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !
என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 3
மைஞ்ஞின்ற குழலாள்தன்
மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
4
நீவாரா(து) ஒழிந்தாலும்
நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய்
அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
5
Go to top
முழுவதும்நீ ஆயினும் இம்
மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
6
தன்சோதி எழுமேனித்
தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
7
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
8
ஆறாத பேரன்பின்
அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
9
சரிந்ததுகில் தளர்ந்தஇடை
அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம்
முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
10
r/tamil • u/Prudent-News-8517 • 1d ago
Im writing this poem and am trying to improve the coherence in it. I would love to know your opinions / interpretations / the emotions it invokes in you! Thanks for reading :)
ஆயிரத்தில் ஒன்று
வண்ணங்கள் ஆயிரம், வானை முட்டும் கட்டிடங்கள் ஆயிரம்
வினாக்கள் ஆயிரம், வினை விதைக்கும் விந்தைகள் ஆயிரம்
லட்சியங்கள் ஆயிரம், அதைத் தட்டி எழுப்பும் கரகோஷம் ஆயிரம்
கனவுகள் ஆயிரம், துயில் மறந்த இரவுகள் ஆயிரம்
மேடு பள்ளம் ஆயிரம், மீளா வினாடிகளின் ஏக்கங்கள் ஆயிரம்
எது ஆயிரமாயினும், ஒன்றில் ஒருமை, மிஞ்சிய அகவை
சேற்றுத் தாமரையோ, தடாகப் பாசியோ
காலம் ஆயிரமன்று, நீயும் ஒன்றென்று
r/tamil • u/dan_da_nakkaa • 1d ago
வீழ்வது இயல்பு,
மீள்வதும் இயல்பு...
வீழ்ந்தாலும்
மீள வேண்டாமெனத்
தோன்றுதடி
உன்னில் விழுந்த பிறகு.
r/tamil • u/Call_me_Inba • 1d ago
Tamil already has an established word for “Dinosaur” which is தொன்மா. தொன் (old/ancient) and மா (animal). This is a neologism. But should we use யாழி to mean Dinosaur? This is an ancient word which has a good scope if revived right?
r/tamil • u/sadiefloat • 1d ago
Hi, I was in Chennai for 2 years during my UG and learnt how to read and write in Tamil. However, I couldn’t learn to speak, even if I try most native speakers don’t understand it because my pronunciation is just bad. How do I improve by myself? I don’t live in Tamil Nadu anymore nor do I talk to my Tamil friends on a regular basis.
r/tamil • u/JagmeetSingh2 • 1d ago
A thesis by Danushanan Rajeswaran Integration of Sri Lankan Tamils into the Finnish Society https://www.theseus.fi/server/api/core/bitstreams/cf50f36b-34f8-4071-b72b-d92c80a3fa63/content
r/tamil • u/KuralSagaDev • 1d ago
r/tamil • u/dan_da_nakkaa • 2d ago
அக்காவோடு
டிவி பார்க்கச் சண்டையிட்டவன்...
இன்று,
அவள் மகளிடம்
கொட்டு வாங்குகிறான்—
புன்னகையோடு.
r/tamil • u/Manogenius • 2d ago
Tamil is a very important language. I want to learn just speaking Tamil. Can anyone help me?
r/tamil • u/Brilliant-Spirit-172 • 3d ago
I get it doesn't only double after வினைத்தொகை (the root word (verb) on it's own) but it sometimes doesn't double after words like ஈட்டி, வந்து etc which are வினையெச்சம்(?)(the verb that doesn't show who speaks it and tense)
r/tamil • u/dan_da_nakkaa • 3d ago
நக கீரல் பட்டு
கிழியும் பட்டோ
என பயந்து
நகம் வெட்டும் அவன்
பட்டாலும் பரவாயில்லை
என்று பட்டு சொல்ல
படாமல் தொட
தொடங்கினான் அவன்
r/tamil • u/Adept-Sea1400 • 3d ago
ஆணின் காதல் தீண்டலில் தொடங்கி,
கூடலில் முற்றும்!
பெண்ணின் காதல் கண்களில் தொடங்கி,
மனத்தில் முற்றும்!
r/tamil • u/dan_da_nakkaa • 4d ago
அவள் நெற்றியில்
என் உதடு சேரும் நேரம்
மூடிய அவள் கண்களுக்குள்
காதலையும் காமத்தையும் கடந்து
அவள் மனதில்
ஆழமாய் இறங்க நினைத்தேன்.
அங்கே
எனக்கான இடம் தேடி வந்தபோதுதான்
தெரிந்தது
ஏற்கெனவே
வேரூன்றியிருந்தேன்
அவள் மனதில்.
r/tamil • u/Background_Sorbet264 • 4d ago
If you understand a bit of Tamil but completely freeze up when you try to reply or completely new to this language, you’re not alone.
I’m a private tutor, and I specialize in helping absolute beginners build sentences from scratch.
No boring grammar charts or textbook drills—just practical, real-world conversational Tamil.
🔴1-on-1 & Online (Zero judgment zone)
🔴1+ Years Experience (Taught 20+ students globally)
🔴Super Flexible & Affordable
If you’re tired of apps and want to actually start speaking, drop me a DM or comment. Let me know your goals and we'll take it from zero!
r/tamil • u/tamizh_amma_india • 4d ago
Vanakkam folks, pl feel free to DM me for learning to read / write / speak Tamizh fluently.
r/tamil • u/browngirlinLA • 4d ago
Hi, looking for Tamil books to read/teach my little one. We live in the US. Any good options/recommendations for websites or books?
r/tamil • u/Unique_Phrase_7806 • 4d ago
Opportunity to create new words for Tamil, Malayalam etc...
r/tamil • u/sunny_2_og • 5d ago
For context,
I'm a Telugu guy who understands Tamil fairly well. I can understand around 70-80% of a typical modern Tamil movie without subtitles. but if it's a 90s rural drama or old movie, something like that, I understand around 50%.
I recently learned the Tamil script.
Can you guys suggest some Tamil books, short stories, or anything else I can start reading?
Which helps me to improve my Tamil reading speed as well as improve my Tamil vocabulary
Thanks
r/tamil • u/TrafficNo2332 • 5d ago
'பெண்டுகள்' , ' பெண்டிர்' - indha mari சொற்களை
Nadaimuraiyil ezhudhavo/pesavo payanpaduthalama?
Edhachu regressive ana words aanu oru genuine question.
Thavaru na suttikattungaa.nanri!
r/tamil • u/Dull_Jump_5161 • 5d ago
hello நண்பர்களே
I've decided to start reading poems and epics from the Sangam era. however Im not very familiar with the vocabulary used in classical Tamil literature.
How can I develop a habit of learning Pazhanthamiz (பழந்தமிழ்) alongside my reading? are there any books, resources or methods you'd recommend?
Your suggestions would be a great help. Thank you!
r/tamil • u/dan_da_nakkaa • 5d ago
இனிமையை உணர
இனிப்பைச் சுவைக்க வேண்டுமா?
அவள் குரல் போதுமே...
ஒரு துளி தேன்கூட
சுவைக்காமல் இனிக்கும்.